தமிழ் சினிமாவில் பல்வேறு கஷ்டங்களை கடந்து ஒரு நடன இயக்குனராக அறிமுகமாகி, பின்... நடிகர், இயக்குனர், தயாரிப்பளார் என, திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

மேலும் செய்திகள்: மழலை சிரிப்பில் மயக்கும் நடிகர் கார்த்தியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்! பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்!
 

திரையுலகில் இவர் பல சாதனைகள் செய்து, பிரபலமானதை விட, சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து, மக்கள் மனதில் நிலைத்து நின்றவர். ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, கோலிவுட் முன்னணி நடிகர்கள் கொடுக்காத நிதியை அறிவித்து ஆச்சர்யப்படுத்தியவர். மேலும், உணவில்லாமல் கஷ்டப்பட்டு வரும் பலருக்கு தினமும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இதுவரை இவர் செய்த உதவிகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்களுடைய நன்றியை தெரிவித்து வந்தாலும், எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத,  ஏழை குழந்தையின் முத்த பரிசால் பூரித்து போய், மன நெகிழ்ச்சியோடு ட்விட் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டதா? என்ன ஆச்சு... வருத்தத்தில் ரசிகர்கள்!
 

அதாவது, ராகவா லாரன்ஸின் தீவிர குட்டி ரசிகர் ஒருவர் சுவரில் வரையப்பட்டிருந்த, ராகவா லாரன்ஸ் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்து, மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்பவரே உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்.

இதுகுக்குறித்து தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ்... "இந்த குழந்தையைப் பற்றி எனக்குத் தெரிவித்த என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த எம். சுதாகர் மற்றும் ஷங்கருக்கு எனது நன்றி, இந்த குழந்தையைப் பார்த்தபோது நான் எனது கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு கொண்டேன். நான் அவரைப் போலவே போராடிக் கொண்டிருந்தேன். இந்த குழந்தைக்கு ஏதாவது சிறப்பு செய்ய விரும்புகிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என நம்புவதாக எமோஷன் ட்விட் செய்துள்ளார். உண்மையில் குழந்தைகளின் அன்பை விட ஒரு கலைஞனுக்கு விலைமதிக்க முடியாத பரிசு என்று ஏதாவது உண்டா என்ன? 

மேலும் செய்திகள்: 'சந்திரமுகி 2 ' ஜோதிகாவுக்கு பதில் இவரா? கர்ப்பத்தால் விட்ட வாய்ப்பை இப்போது பிடிக்க பிளான் போடும் நடிகை!
 

அந்த ட்விட் இதோ...