இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் வழங்கிய காசோலையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கொரோனா வைரஸின் திடீர் பாதிப்பால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கூலி வேலை செய்பவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் சரிவை சந்தித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தோடு அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என நினைத்த பலருக்கும், மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடித்தது ஏமாற்றம் தான் என்றாலும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலுக்கு இந்த ஊரடங்கு தேவை என்பதும் பலருடைய கருத்தாகவும் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா கலைஞர்களுக்கு, பலர் உதவி வரும் நிலையில்... நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்ததுமே 3 கோடி நிதி உதவியை அளித்தார். இதை தொடர்ந்து பல உதவிகளை செய்ய உள்ளதாக தெரிவித்து வந்த இவர், பசியோடு இருப்பவர்கள் பசியாற தேவையான முயற்சியை எடுத்து வருவதாக தமிழ் புத்தாண்டு அன்று தெரிவித்தார்.

மேலும், ஓவ்வொரு தூய்மை பணியாளர்களுடைய வங்கி கணக்கிலும் பணம் போட உள்ளதாகவும், அதுகுறித்த முயற்சிகளை எடுத்து வருவதையும் தெரியப்படுத்தினார். இதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதற்கு நேற்றைய தினம், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

இதையும் படிங்க: தாவணி எங்கம்மா... பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இதனிடையே தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரான நாசர், கொரோனா ஊரடங்கு சமயத்தில் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவியை நடிகர் சங்கத்திற்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதேகோரிக்கையை நடிகர் உதயா உள்ளிட்டோரும் விடுத்திருந்தனர். இதையடுத்து ராகவா லாரன்ஸ் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்கத்திற்கு அளித்துள்ளார். 

இதையும் படிங்க: தனது சாம்ராஜ்யத்தை சரித்தவரையே வளைத்து போட்ட ராஜமெளலி... “ஆர்ஆர்ஆர்” படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி....!

ராகவா லாரன்ஸ் உதவிகளை அறிவிப்பதோடு சரி, அதை சரியாக செயல்படுத்துவதில் என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் வழங்கிய காசோலையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் கொடுக்க பணமிருந்தால் மட்டும் போதாது, மனமும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நடிகர் உதயா, ராகவா லாரன்ஸின் உதவியை மனதாரா பாராட்டியுள்ளார்.