எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வசூல் ரீதியாக இந்திய திரையுலகையே டோலிவுட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றை அசால்டாக பின்னுக்குத் தள்ளிவிட்டார் நம்ம தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. 

இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி, டோலிவுட் கனவு கன்னி ராஷ்மிகா மந்தனா, நம்ம ‘செல்லம்’ பிரகாஷ் ராஜ் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்த படம்  “சரிலேரு நீக்கெவரு” படம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி  ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

உகாதி அன்று ஜெமினி தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பான போது   “பாகுபலி” படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் செய்த டி.ஆர்.பி. சாதனைகளை எல்லாம் சர்வசாதாரணமாக தும்சம் செய்தது. இதையடுத்து தனது அடுத்த படத்திற்கு ஹீரோவாக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வளைத்து போட்டுவிட்டார் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி. 

இதையும் படிங்க: அந்த இடத்தில் அசத்தல் மச்சம்... மாளவிகா மோகனனின் ஹாட் செல்ஃபியால் வெளியான மர்மம்...!

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு   “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி   “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன கன்றாவி போஸ் இது... ஊரடங்கிலும் அடங்காத ஷாலு ஷம்மு... கடுப்பான நெட்டிசன்கள்...!

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் பேசிய ராஜமெளலி,  “ஆர்ஆர்ஆர்” படத்திற்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தை துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.