கொரோனா வைரஸின் திடீர் பாதிப்பால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கூலி வேலை செய்பவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் சரிவை சந்தித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தோடு அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என நினைத்த பலருக்கும், மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடித்தது ஏமாற்றம் தான் என்றாலும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலுக்கு இந்த ஊரடங்கு தேவை என்பதும் பலருடைய கருத்தாகவும் உள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா கலைஞர்களுக்கு, பலர் உதவி வரும் நிலையில்... நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்ததுமே 3 கோடி நிதி உதவியை அளித்தார். 

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என முதற்கட்டமாக 3 கோடி ரூபாயை ஒரே தடவையில் அறிவித்து, தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

இதை தொடர்ந்து பல உதவிகளை செய்ய உள்ளதாக தெரிவித்து வந்த ராகவா, அடுத்ததாக தான் நடிக்க உள்ள படம் மூலம் கிடைத்த தனது சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளதாக அறிவித்தார்.  இதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். 

இதையும் படிங்க: துளிகூட டிரஸ் இல்ல... தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த தமன்னா...!

நலித்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி செய்தார். மீண்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்த  ராகவா லாரன்ஸ், அதனை சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நிதி உதவி செய்தார். 

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக தட்டித்தூக்க பக்கா பிளான்... பெண்களுக்கு “திரெளபதி” இயக்குநர் வைத்த கோரிக்கை...!

இப்படி அடுத்தடுத்து உதவிகளால் திணறடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நலிந்த நடன கலைஞர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். நலிந்த நடன கலைஞர்களுக்காக 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளார். அதை மிகவும் கஷ்டப்படும் 23 நடன கலைஞர்களின் வங்கி கணக்கில் தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், சென்னையைச் சேர்ந்த 13 பேருக்கும் ராகவா லாரன்ஸ் செய்துள்ள இந்த உதவி, பாராட்டுக்களை குவித்து வருகிறது.