கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, மக்களை பொரித்தும் அச்சமடைய செய்துள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள், துரிதமாக செயல் பட்டு, பல்வேறு விழுப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், கொரோனா தாக்காமல் எப்படி பாதுகாத்து கொள்வது என்றும் அறிவுறுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக அரசு கொரோனா தாக்கத்தை கட்டு படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அவர்களையும், சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "அனைவருக்கும் வணக்கம்!

இன்று உலகையே பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் "கொரோனா வைரஸ்" தமிழகத்தில் முழுமையாய் பரவி விடாமல் இருக்க, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துரிதமாகவும் மிகத் தீவிரமாகவும் எடுத்து,"கொரோனா வைரஸை" கட்டுக்கள் வைத்திடுவதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் மாண்புமிகு திரு "எடப்பாடி" பழனிச்சாமி சார் அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காத பொழுது, எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ, அதேபோல, ஒரு விஷயத்தில் அரசு சரியாக செயல்படுகிற போது பாராட்ட வேண்டியதும் நமது கடமை!

தமிழக அரசை பாராட்டுகிற அதே சமையம், பொதுமக்களாகிய நாமும் அரசு எடுத்துக் கூறி வருகிற, சுகாதார பாதுகாப்பு முறைகளை கவனத்துடன் கடைப்பிடிப்போம்! உயிர் நலன் காப்போம்!

நன்றி!" என தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.