'கிழக்கே போகும்' ரயில் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாரதி ராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ராதிகா. நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் என்பதால் வாரிசு நடிகை என்கிற ஒரு தோற்றம் அவர் மேல் இருந்தாலும்... அதனை உடைத்து வெளியே வந்து தனக்கான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கினார்.

70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக இருந்த இவர், பின் குணச்சித்திர வேடங்களில் கலக்க துவங்கினார். பின் சின்னத்திரையுலும் இவருடைய பங்கு மிக அதிகம் என்றே கூறலாம்.

எப்போது நடிப்பில் இவர் பிஸியாக இருந்தாலும், அதையும் தாண்டி, ப்ரொடக்ஷன், அரசியல் உள்ளிட்ட பல வற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக நடிகை ராதிகா, எம்.ஆர். ராதாவின் மனைவி அதாவது அவனுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது.