#RadheShyam second single பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் இடம்பெற்றுள்ள "Aashiqui Aa Gayi"  பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பொங்கல் விருந்தாக அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதன் Aashiqui Aa Gayi,என்னும் பாடலின் ஸ்னீக் பிக் சமீபத்தில் வெளியானது. இதில் பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

YouTube video player

முன்னதாக நடிகர் பிரபாஸின் பிறந்த நாளானன்று ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்தது. 

ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட டீசர் அவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தற்போது வெளியாகியுள்ள ஸ்னீக் பிக்கும் அதே வரவேற்பை பெற்று வருகிறது.