தலைப்பைப்பார்த்து இதென்னய்யா புதுக்குழப்பம் ‘தினகரனுக்கு என்ன ஆச்சு?’  என்று கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். இது  சினிமா தேர்தல் கமிஷனர் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு நடத்தும் இடைத்தேர்தல். தமிழக சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் அதே ஏப்ரல் மாதம் ரிலீஸாகவிருக்கிறது இந்த ‘ஆர்.கே.நகர்’.

சமாச்சாரம் இதுதான். இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் நடிகர் வைபவை வைத்து ‘ஆர்.கே.நகர்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகியே ஒருவருடம் ஓடிவிட்டது.

இதில் வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடித்திருக்கிறார். மேலும் சம்பத், இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வந்தது.

தற்போது இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் தேதி (படம் ரிலீஸ் தேதி)-யை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். 
venkat prabhu@vp_offl
 Very happy to announce #Rknagar is releasing next month!!! The election date will be announced shortly!!! @badri_kasturi @blacktktcompany @saravanarajan5 @actor_vaibhav @Premgiamaren