இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் குறித்து, குரூப் 1 தேர்வு தாளில் கேள்வி இடம்பெற்றுள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் குறித்து, குரூப் 1 தேர்வு தாளில் கேள்வி இடம்பெற்றுள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ராஸ், கபாலி, போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ’பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரஞ்சித் தயாரித்தார்.
கதாயகனாக கதிர், தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். நாயகியாக ஆனந்தி நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது மட்டும் இன்றி, வசூலிலும் வாரி குவித்தது. மேலும் உலகின் பல நாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் ’பரியேறும் பெருமாள்’ பற்றிய கேள்வி ஒன்று வினா தாளில் கேட்கப்பட்டுள்ளது. அதில் "தலை சிறந்த படைப்பான ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றில் ஒன்றை சரியானவற்றை தேர்வு செய்யவும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்". இந்த படம் குறித்த மூன்று வினாக்களும் கொடுக்கப்பட்டிருந்தது.
இப்படம் சாதியக் கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது
இப்படம் மிகச் சிறந்த படம் என்று வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
இப்படம் மாரி செல்வராஜ் செல்வராஜால் இயக்கப்பட்டு நிலம் தயாரிப்பு குழுவினரால் வெளியிடப்பட்டது.
முதல் முறையாக, ஒரு வெற்றி படத்தை பற்றி குரூப் 1 தேர்வு வினா தாளில் கேள்வி எழுப்பப்பட்ட விஷயம், அந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 4, 2021, 11:57 AM IST