புஷ்பவனம் குப்பு சாமி:

பிரபல நாட்டுப்புற பாடகரும், பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி தற்போது, சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள ஒரு பதிவு பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

என்ன பதிவு?

மேலும் செய்திகள்: பெப்சி தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்த நயன்தாரா! எத்தனை லட்சம் தெரியமா?
 

அப்படி என்ன பதிவு போட்டுள்ளார் என நினைக்கிறீர்களா...? மருத்துவராக இருக்கும் பல்லவி, அவர் சந்தித்து வரும் பிரச்னையை தான் இந்த ட்விட்டரில் போட்டுள்ளார்.

அதாவது, சமீப காலமாக கர்ப்பம் தரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் எவ்வளவு வேண்டும் என்றாலும் லவ் பண்ணுங்க, குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என கூறி... மிகவும் கிண்டலாக என்னடா பண்றீங்க என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கமெண்ட்:

இவரின் இந்த ட்விட்டுக்கு சிலர் சிரித்தபடி நகர்ந்தாலும், ஒரு சிலர் தங்களுடைய விமர்சனங்களையும் பல்லவிக்கு எதிராக போட்டு தள்ளி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: சீக்ரெட் கிரஷ்... விஷயத்தில் பிந்து மாதவிற்கு இப்படி பிரச்சனையா?

சமீபத்திய ஆய்வு:

கொரோனா பீதி காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால், கருத்தடை மாத்திரைகள் மற்றும், காண்டம் போன்றவற்றின் விற்பனை மருந்தகங்களில் அமோகமாக இருக்கிறது என தெரிய வந்த நிலையில், மருத்துவரான பல்லவி இப்படி தெரிவித்துள்ளார்.

தத்துவம்:

மின் வசதி இல்லாமல், எந்த தொழிநுட்ப வசதியும் இல்லாமல் இருந்த அந்த காலத்தில், நம் முன்னோர்கள் 10 , 15 குழந்தைகள் பெற்றதை ஆச்சர்யமாக பார்த்த பலருக்கும், வீட்டில் முடங்கி இருந்தால்... என்ன நடக்கும் என்பது இப்போது புரிந்திருக்கும்....