Asianet News TamilAsianet News Tamil

புரட்சி தலைவர் முதல் தளபதி வரை.. நடிகராக வந்து அரசியல் கட்சி தலைவர்களாக மாறிய நடிகர்கள் - லிஸ்ட் இதோ!

Actors with Political Parties : தமிழ் திரையுலக வரலாற்றில் பல்வேறு நடிகர்கள், புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் அரசியல் கட்சி துவங்கியிருக்கிறார்கள். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Puratchi Thalaivar MGR to Thalapathy vijay actors turned politicians in tamil cinema ans
Author
First Published Feb 2, 2024, 6:26 PM IST

தளபதி விஜய் அவர்கள் தனது திரையுலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தனது "தமிழக வெற்றி கட்சி" மூலம் தேர்தலில் களமிறங்க வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் நடிகராக அறிமுகமாகி, பின் அரசியல் கட்சி துவங்கிய நடிகர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

தமிழ் நாட்டை சுமார் 25 ஆண்டுகள் ஆண்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கடந்த 1972 ஆம் ஆண்டு "அதிமுக" என்ற தனது கட்சியை துவங்கினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய புகழுக்கு இணையான புகழோடு நடிப்புத் துறையின் கடவுளாக திகழ்ந்துவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 1989 ஆம் ஆண்டு "தமிழக முன்னேற்ற முன்னணி" என்ற கட்சியை துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்! லால் சலாமுக்கு வந்த சர்ச்சையால்.. மௌனம் கலைத்த நடிகை தன்யா!

அதே ஆண்டு எம்ஜிஆர் மீது அளவற்ற பற்று கொண்ட பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்கள் "எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்" என்கின்ற கட்சியை 1989 ஆம் ஆண்டு துவங்கினார். திமுகவில் இருந்து வந்த பிரபல நடிகர் டி. ராஜேந்தர் அவர்கள் 1991 ஆம் ஆண்டு "தாயக மறுமலர்ச்சி கழகம்" என்கின்ற ஒரு கட்சியை துவங்கினார். 

அரசியலில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தனது "தேமுதிக" கட்சியை துவங்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் தனது "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை" கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கினார். பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு "நாடாளும் மக்கள் கட்சி" என்கின்ற தனது கட்சியை துவங்கினார். 

திரையுலகில் பல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பிரபல நடிகர் கருணாஸ் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு "முக்குலத்தோர் புலிப்படை" என்கின்ற கட்சியை துவங்கினார். தமிழ் சினிமாவின் மட்டும் அல்லாமல் உலக சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நடிகராக திகழ்ந்துவரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது "மக்கள் நீதி மய்யம்" கட்சியை துவங்கினார். 

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கடந்த 2021 ஆம் ஆண்டு "இந்திய ஜனநாயக புலிகள்" என்கின்ற தனது கட்சியை துவங்கினார். இன்று பிப்ரவரி 2 2024 ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்கள் தனது "தமிழக வெற்றி கட்சி"யை துவங்கியிருக்கிறார்.

"சொன்னது ஒன்னு.. நடந்தது ஒன்னு".. ஆனால் என் தப்பு தான்.. அட்லீ மீது மனவருத்தம் - சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios