Protest against kamal hassan
எங்கிருந்தெல்லாம் எதிர்ப்பு கிளம்புது பாருங்க !! ஆந்திராவில் கமலஹாசன் உருவப்படம் எரிப்பு !!!
இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் அவரது உருவப்படம் எரிக்கப்பட்டது.
தீவிர அரசியலில் களமிறங்க தயாராகி வரும் நடிகர் கமல் ஹாசன், ஆனந்த விகடன் வார இதழில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அதில் இந்து தீவிரவாதம் குறித்து அவர் எழுதிய கட்டுரை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பின. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கமல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் ஜனா ஜகாரானா சமிதி என்ற அமைப்பு சார்பில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது நடிகர் கமலஹாசன் உருவப்படத்தை எரித்தனர்.
இதனிடையே திருவண்ணாமலை, ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களில் இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசன் தெரிவித்த கருத்துககு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
