சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வந்த திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது. 

 

இதையு ம் படிங்க: அந்த விஷயத்தில் நயனையே அடித்து தூக்கிய வனிதா... பீட்டர் பாலுடன் கோவாவில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!

லாக்டவுன் நேரத்தை பயன்படுத்திக் கொண்ட சிம்புவும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். அதுவும்  ‘மாநாடு’ படத்திற்காக கடின உடல் பயிற்சிகள் செய்து,  கிட்ட தட்ட 100 கிலோவிலிருந்து  அவர் தற்போது 21  கிலோ உடல் எடையை குறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.  கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சில படங்களில், கொழுக் மொழுக் என காட்சியளித்த சிம்பு, இந்த படத்தில்... செம்ம ஃபிட்டாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அவரது தோற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. சிம்புவின் பிட்னஸ் தோற்றத்தை பார்க்க வேண்டுமென அவருடைய ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் ஒட்டி கோரிக்கை விடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. 

இந்நிலையில் தற்போது அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பு நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் மீண்டும் அனுமதி அளித்ததை அடுத்து ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் அடக்க முடியாத ஆவலுடன் காத்திருந்தனர். அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்திருந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: அச்சு அசலாக சமந்தா போல் மாறிய அதுல்யா... கவர்ச்சி உடையில் கச்சிதமாக கொடுத்த போஸ்கள்...!

இதனிடையே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்பு ரசிகர்களுக்கு செம்ம குஷியான செய்தியைக் கூறியுள்ளார். அதாவது நவம்பர் முதல் வாரம் முதல் மீண்டும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இத்தகவலை அறிந்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.