தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜுக்கு இன்று  எளிமையான முறையில், இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய தந்தைக்கு அவருடைய மகளே முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில், 'தில்' என்கிற திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு, தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தவர் தில் ராஜு. தெலுங்கில் சாதிக்க துடிக்கும் பல அறிமுக இயக்குனர்களின் படத்தை துணிந்து தயாரித்து அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.


அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளியான, பொம்மரியலு, பருகு, போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.  தற்போது  முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தில் ராஜு, NTR நடிக்கும் படம் ஒன்றையும், 'ஐகான்' என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.


மேலும் செய்திகள்: வெள்ளாவி நடிகையின் காதலர் இவரா..? மூடி மறைத்த காதலரை ரசிகர்களுக்கு காட்டிய டாப்ஸி!

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 


எனவே தில் ராஜு தன்னுடைய மகள் ஹர்ஷிதாவை திருமணம் செய்து கொடுத்த பின் தனியாக வசித்து வந்தார்.

தந்தை தனியாக, வாழ்ந்து வருவதை பார்த்த அவருடைய மகள், தில் ராஜூவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுபடி கூறினார். மேலும் தன்னுடைய தந்தைக்கு ஏற்ற மணப்பெண்ணையும் இவரை பார்த்துள்ளார். 
 

மேலும் செய்திகள்: நயன்தாரா குழந்தையில் கூட இவ்வளவு அழகா! யாரும் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டு அம்மாவுக்கு வாழ்த்து!

இந்நிலையில் மகள் தனக்கு பார்த்த தேஜஸ்வினி என்பவரை, தயாரிப்பாளர் தில் ராஜு மிகவும் எளிமையான முறையில், ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலில் இன்று  திருமணம் செய்து கொண்டார். மகள் ஹர்ஷிதா மற்றும் சமீபத்தில் பிறந்த தன்னுடைய பேத்தியின் கண் முன்னே, இரண்டாவது மனைவியை கரம் பிடித்தார் தயாரிப்பாளர் தில் ராஜு.

ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட சிலர் மட்டுமே இவர்களுடைய திருமணத்தில் நேரில் கலந்து கொண்டனர். தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.