நடிகர் தனுஷ் நடித்த தேசிய விருது திரைப்படம், 'ஆடுகளத்தில்' வெள்ளாவி பெண்ணாக வந்து ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் ஒரே படத்தில், கவர்ந்திழுத்தவர் நடிகை டாப்ஸி. இந்த படத்தை தொடர்ந்து, 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா' ஆகிய சில தமிழ் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்த துவங்கிய டாப்ஸி நடிப்பில், இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான் கடந்த வருடம் அஜித்தை நடிப்பில், 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் வெளியாகி, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அஜித் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் நடித்திருந்தார். 

டாப்ஸி ஏற்று நடித்த வேடத்தில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவான, 'கேம் ஓவர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்று தந்தது.

மேலும் செய்திகள்: முடிவுக்கு வருகிறது நயன் - விக்கி காதல்! விரைவில் டும் டும் டும்?
 

பாலிவுட் திரையுலகத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் டாப்ஸி நீண்ட இடைவெளிக்கு பின், தமிழில் 'ஜன கன மன' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

30 வயதை கடந்த நாயகிகளில் ஒருவராக இருக்கும் டாப்ஸி, ஒருவரை ரகசியமாக காதலித்து வருவதாக பாலிவுட் திரையுலகத்தில் ஏற்கனவே பல பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், டாப்ஸி அதனை மறுத்ததும் இல்லை, அதே சமயத்தில் ஏற்று கொண்டதும் இல்லை.

மேலும் செய்திகள்: செம்ம ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா! கிழிந்த மாடல் ஜீன்ஸ்... டையிட் டிரஸ் அணிந்து இளசுகளை இம்சிக்கும் இதமான போஸ்!
 

இந்த நிலையில் தான் காதலித்து வருவதை வெளிப்படையாக டாப்ஸி ஒப்புக்கொண்டுள்ளார். தனது காதலர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு பேட்மிண்டன் வீரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது காதலருடன்  இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த காதலை தனது தாயார், சகோதரரி உட்பட தனது குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் இந்த காதலை தாயாரும், சகோதரியும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த காதலுக்கு அர்த்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது டாப்ஸி தன்னுடைய காதலருடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.