நடிகை பிரியங்கா மோகனை கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்தது இந்த நடிகர் தானா... வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Priyanka mohan : படங்களில் ஹோம்லி லுக் உடன் அடக்க ஒடுக்கமாக தோன்றிய பிரியங்கா மோகன், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியதைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர்.
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் என வரிசையாக தான் நடித்த படங்கள் ஹாட்ரிக் ஹிட்டானதால் செம்ம குஷியில் உள்ளாராம் நடிகை பிரியங்கா மோகன். இந்த சந்தோஷத்தை கொண்டாட அண்மையில் அவர் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். அவருடன் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன், நடிகர்கள் கவின், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ஷெட்டி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
துபாயில் ஜாலியாக பொழுதை கழித்த பிரியங்கா மோகன், அங்கு எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதில் அவர் குட்டை உடையில் தொடை அழகு முழுவதும் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸுகளை அள்ளிக் குவித்தன.
படங்களில் ஹோம்லி லுக் உடன் அடக்க ஒடுக்கமாக தோன்றிய பிரியங்கா மோகன், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியதைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர். இந்நிலையில், அந்த போட்டோஷூட்டை எடுத்தது நடிகர் கவின் தான் என்பது தெரியவந்துள்ளது. நடிகை பிரியங்கா மோகன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம் அது தெரியவந்துள்ளது.
நடிகை பிரியங்கா மோகனும், கவினும் டாக்டர் படத்தில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்திருந்த அப்படத்தில் கவின் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அப்போதிலிருந்தே அவர்கள் இருவரும் நட்புடன் பழகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Don : பாக்ஸ் ஆபிஸில் அஜித்தை அடிச்சுதூக்கிய சிவகார்த்திகேயன்.. வலிமையை ஓரங்கட்டி டான் படைத்த டாப் டக்கர் சாதனை