Don : பாக்ஸ் ஆபிஸில் அஜித்தை அடிச்சுதூக்கிய சிவகார்த்திகேயன்.. வலிமையை ஓரங்கட்டி டான் படைத்த டாப் டக்கர் சாதனை
Don : சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், டான் படமும் அதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் வெளியான டான் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் பாதி காமெடி கலாட்டா, இரண்டாம் பாதி சென்டிமெண்ட் என பக்கா கமர்ஷியல் படமாக வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், டான் படமும் அதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் 78 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் டான் படம் ஒரு சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விஜய்யின் பீஸ்ட் உள்ளது. இப்படம் 1 மில்லியன் டாலருக்கு மே வசூலித்திருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் அஜித்தின் வலிமை படம் உள்ளது. இப்படம் 4 லட்சம் டாலர் வசூலித்திருந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படம் 10 நாட்களில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்து வலிமை படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Vaadivaasal : வாடிவாசலுக்காக தீயாய் வேலைசெய்யும் சூர்யா! வெற்றிமாறன் சொன்ன அப்டேட்டை கேட்டு மெர்சலான ரசிகர்கள்