Asianet News TamilAsianet News Tamil

Priyanka chopra: முத்தத்தால் மொத்ததையும் சொன்ன பிரபலம்.. முடிவுக்கு வந்த விவாகரத்து சர்ச்சை

நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra), கடந்த சில தினங்களுக்கு முன்னர், இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவர் நிக் ஜோனஸின் (Nick Jonas) பெயரை நீக்கினார். இதையடுத்து, அவர் நிக் ஜோனஸை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின.

Priyanka Chopra squashes Nick Jonas split rumors
Author
Tamil Nadu, First Published Nov 26, 2021, 5:38 PM IST

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

Priyanka Chopra squashes Nick Jonas split rumors

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவர் நிக் ஜோனசின் பெயரை நீக்கினார். இதையடுத்து, அவர் நிக் ஜோனசை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின.

ஏனெனில், அண்மையில், நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாகசைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அதனை சூசகமாக தெரிவிக்கும் விதமாக, சமூக வலைதள பக்கத்தில் தனது பெயரின் பின்னால் இருந்த தன்னுடைய கணவரின் பெயரை தான் முதலில் நீக்கினார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Priyanka Chopra squashes Nick Jonas split rumors

தற்போது பிரியங்கா சோப்ராவும் அவ்வாறு பெயரை நீக்கியதால், விவாகரத்து சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் ஒரு புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. கணவரை கட்டிப்பிடித்தபடி முத்தம் கொடுக்க ரெடியாக இருந்த சமயத்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விவாகரத்து சர்ச்சைகளை தவிடுபொடி ஆக்கி உள்ளார் பிரியங்கா சோப்ரா.

Follow Us:
Download App:
  • android
  • ios