பாலிவுட், கோலிவுட், தொடந்து தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இளைய தளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

இவர் தன்னை விட 10  வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து வந்தார். பாலிவுட் வரை ஹாலிவுட் முதல் கொண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு சில மாதம் முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து... டிசம்பர் 1  மற்றும் 2 ஆம் தேதிகளில், திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி நேற்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் திருமணம் கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படி டிசம்பர் 1 ஆம் தேதியும், இந்து முறைப்படி டிசம்பர் 2 ஆம் தேதியும் நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பாலிவுட் பிரபலங்கள், அம்பானி குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் தற்போது இந்த திருமணம் மூலம் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரியங்கா சோப்ரா. திருமணம் முடிந்ததும் அரண்மனை முன்னாள் வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்துள்ளார். அதை பார்த்தவர்கள் பிரமித்து போய் உள்ளனர். அந்த அளவிற்கு பல விதமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் ஜோத்பூர் அரண்மனையே புகைமூட்டத்தில் மூழ்கியது.

இதனால் அதிக அளவு காற்று மாசு பட்டதாக அக்கம் பக்கம் வசித்தவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதை குறைத்து மாசு பரவுவதை தவிர்த்து என்னை போல் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த பிரியங்கா சோப்ரா தனது திருமணத்தில் மட்டும் வான வேடிக்கைகள் இப்படி வெடிக்கலாம் ? என்று சமூக வலைதள வாசிகள் கேள்வி எழுப்பி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.