ஜோத்பூர் அரண்மனையில் கிருஸ்துவ முறைப்படி தன்னுடைய காதலர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, இவர் தன்னை விட 10  வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து வந்தார். பாலிவுட் வரை ஹாலிவுட் முதல் கொண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு சில மாதம் முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து... டிசம்பர் 1  மற்றும் 2 ஆம் தேதிகளில், திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி நேற்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் திருமணம் கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாதிரியார் முன்னிலையில் மண ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

பிரியகா சோப்ராவின் தாய் மது சோப்ரா, சகோதரர் சித்தார்த், உறவினர்களான பிரநிதி சோப்ரா, மன்னாரா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸன் பெற்றோர் பால் கெவின் சீனியர் டென்னிஸ், சகோதரர் கெவின், அவரது மனைவி டேனியல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் சிலரும் இவர்களுடைய திருமணத்தில் பங்கேற்றனர்.

மேலும் இவர்களுடைய திருமணத்தையொட்டி அரண்மனை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததுடன், யாரும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் செல்போன் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுதடப்பட்டு இருந்தது. 

கிருஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் முடிவடைந்ததை நிலையில், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் ஜோடி இன்று மீண்டும் இந்து முறைப்படி திருமணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.