நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22 படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை மற்றும் 2 முன்னணி நடிகர்கள்!

நாகசைதன்யா வை ஹீரோவாக வைத்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள படத்தில் மூன்று முன்னணி பிரபலங்கள் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Priyamani nagachaitanya and sarathkumar joined venkatprabhu directing NC22 movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக  NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில்  NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Priyamani nagachaitanya and sarathkumar joined venkatprabhu directing NC22 movie

தங்களுடைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த திறமையான நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ள மற்ற முக்கிய நடிகர்கள். 

மேலும் செய்திகள்: அடி தூள்... முதல் வாரத்திலேயே மொத்த போட்டியாளர்கள் மனதையும் கவர்ந்த ஜிபி முத்து..! வெளியான புரோமோ!

 

Priyamani nagachaitanya and sarathkumar joined venkatprabhu directing NC22 movie

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இசையில் மேதமை கொண்ட தந்தை மகனுமான ’இசைஞானி’ இளையராஜா மற்றும் ’லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர். பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத, SR கதிர் ஒளிப்பதிவை கையாள்கிறார். தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: GP Muthu: பிரபல கிரிக்கெட் வீரரின் படத்தில் நடித்துள்ள ஜிபி முத்து..! வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios