தற்போது ஸ்லீவ்லெஸ் சல்வார் அணிந்து பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ள புகைப்படங்களும் லைக்குகளை பெற்று வருகிறது.

செய்தி சேனலான புதிய தலைமுறையில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர், விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் மூலம் நடிகையானார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதோடு திரை உலகிற்குள் நுழைவதற்கான வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் என்னும் படத்தில் முதன் முதலாக தோன்றியிருந்தார் ப்ரியா பவானி சங்கர். அதோடு முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...வாவ்..அழகான உடையில் ...பார்ப்பவர்களின் மனதை கவரும் நிவேதா பெத்துராஜ்

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக தோன்றி ரசிகர்களை கவர்ந்திருந்தார் பிரியா பவானி. பின்னர் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் படத்தில் நாயகியானார். 2020ல் மாஃபியா அத்தியாயம் ஒன்று படத்தில் நடித்திருந்த இவர் வெப் தொடரையும் விட்டு வைக்கவில்லை டைம் என்ன பாஸ் என்னும் அமேசான் ப்ரைம் தொடரில் தோன்றியிருந்தார்.

கடந்த ஆண்டு ஜீவா மற்றும் அருள்நிதி நடித்த சந்திப்போம், கசடதபற மற்றும் ஓ மணப்பெண்ணே ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் இந்த வருடம் மட்டும் அருண் விஜய் உடன் யானை, அதர்வாவுக்கு ஜோடியாக குருதி ஆட்டம், தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...நிகழ்ச்சி மேடையில் மாமியாரின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சாந்தனு...

View post on Instagram

மேலும் மீண்டும் எஸ் ஏ சூர்யாவுடன் பொம்மை, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், ராகவா லாரன்ஸின் ருத்ரன், சிம்புவின் பத்து தல, உலக நாயகனின் இந்தியன் 2, என அரை டஜன் படங்களை தன் கையில் வைத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர். முன்னணி நாயகியாவிட்ட இவர் சமீபத்தில் தனது விடுமுறையை கழிக்க மற்ற நடிகைகள் போல வெளிநாடு சென்றிருந்தார். அங்கு வழக்கத்திற்கு மாறாக உடை அணிந்து இவர் கொடுத்த கிக் போஸ்கள் சமூக வலைத்தளத்தை சுற்றி வந்தன.

மேலும் செய்திகளுக்கு...சேலையை ஒதுக்கி..இடுப்பழகை காட்டி திக்குமுக்காட வைக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

குட்டையான உடை அணிந்து இவர் கொடுத்திருந்த கவர்ச்சி புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சல்வார் அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படங்களும் லைக்குகளை பெற்று வருகிறது.

View post on Instagram