பாவாடை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து நிவேதா கொடுத்துள்ள அழகிய போஸ்கள் பார்ப்பவர்களை கவர்ந்தது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி லைக்குகளையும் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், நிவேதா பெத்துராஜ் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். இதை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்திருந்த இவருக்கு தெலுங்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். நிவேதா அதே ஆண்டில் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் வேடத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...நிகழ்ச்சி மேடையில் மாமியாரின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சாந்தனு...

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார் இவர் இறுதியாக தெலுங்கில் இரு இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் என்னும் படத்தில் அன்பரசி மாணிக்கவேலாக நடித்திருந்தார் தற்போது வரை முன்னணி நடிகையாகும் ரேசில் ஓடிக்கொண்டிருக்கும் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூற வேண்டும்.

முன்னதாக இவர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தில் நடித்து மிகுந்த பாராட்டுகளை பெற்றிருந்தார். முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்த போதும் தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கமே சுற்றி வருகிறார்.இதற்கிடையே நிவேதா பெத்துராஜ் கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் படுக்கையில் இருந்தபடி கொடுத்திருந்த போட்டோக்கள் வைரலாகின.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...சேலையை ஒதுக்கி..இடுப்பழகை காட்டி திக்குமுக்காட வைக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

அதோடு தோட்டத்தில் நின்றபடி சுத்தமாக மேக்கப் எதுவும் இல்லாமல் இவர் கொடுத்த ஒவ்வொரு போஸ்களும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. தற்போது பாவாடை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து இவர் கொடுத்துள்ள அழகிய போஸ்கள் பார்ப்பவர்களை கவர்ந்தது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி லைக்குகளையும் பெற்று வருகிறது.

View post on Instagram