வயசு... அதிகரிக்க அதிகரிக்க தான் தலைவருக்கு கூடுதல் அழகும், ஸ்டைலும் கூடி கொண்டே போவது போல், அவர் திரைப்படம் வெளியாகும் போது, சில தனியார் கம்பெனிகள் ஊழியர்களை குஷி படுத்தும் விதமாக படம் பார்க்க டிக்கெட் கொடுப்பது மட்டும் இன்றி அன்றைய நாள் விடுமுறையையும் அளிக்கின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே, கபாலி, காலா, படங்கள் வந்தபோது சில தனியார் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களுக்கு தலைவர் படத்தை பார்க்க ஊதியத்தோடு கூடிய விடுமுறை அளித்தனர்.

அதே போல், இந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள, 'தர்பார்' படத்திற்கும் ஒரு தனியார் நிறுவனம் ஊதியத்தோடு கூடிய விடுமுறை அளித்து, ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாக, தலைவரின் ரசிகர்கள் பலர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே இது போன்ற சலுகைகள் சாத்தியம் என்று கூறி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.