Asianet News TamilAsianet News Tamil

Preity Zinta| 46 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பாலிவுட் நடிகை ; வாடகை தாய்க்கு நன்றி கூறி நெகிழ்ச்சி

பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ள மகிழ்ச்சி செய்தியை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 

Preity Zinta got Twins Via Surrogacy
Author
Chennai, First Published Nov 18, 2021, 5:46 PM IST

பாலிவுட் பிரபலமான ப்ரீத்தி ஜிந்தா தில் சே, லக்ஷ்யா, சலாம் நமஸ்தே, கல் ஹோ நா ஹோ, வீர்-ஜாரா மற்றும் தில் சாஹ்தா ஹை போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் .  இவர் கடைசியாக 2018 இல் வெளியான பயாஜி என்னும்  சூப்பர்ஹிட் படத்தில்  நடித்தார். பின்னர்  தொலைக்காட்சி தொடரான Fresh Off The Boat -ல்  சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து மணவாழ்வில் அடியெடுத்து வைத்த இவர் கடந்த பிப்ரவரி 29, 2016 அன்று  Gene Goodenough  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இதன் பின்னர் ப்ரீத்தி ஜிந்தா தம்பதியினர் அமெரிக்கா  லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார். தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தரும் ப்ரீத்தி ஜிந்தா தீபாவளி, ஹாலோவீன், கிறிஸ்துமஸ்  போன்ற  விழா கொண்டாட்டத்தின் போது தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஜீன் குட்எனஃப்.ஜோடி  தங்களுடைய இரட்டைக் குழந்தைகளான ஜெய் மற்றும் கியா - வாடகைத் தாய் மூலம் பிறந்ததை இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவித்து தங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர் . 46 வயதான நடிகை தனது மற்றும் தனது கணவரின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு எழுதிய குறிப்பில் ; "அனைவருக்கும் வணக்கம், நான் இன்று உங்கள் அனைவருடனும் எங்கள் அற்புதமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். நானும் ஜீனும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் இதயங்கள் மிகவும் நன்றியுணர்வுடன் நிரம்பியுள்ளன. எங்கள் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட்எனஃப் மற்றும் ஜியா ஜிந்தா குட்எனஃப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த அன்புடன் வரவேற்கும். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தைப் பற்றி நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். "இந்த நம்பமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாய்க்கு மனமார்ந்த நன்றி.  என கூறியுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Preity G Zinta (@realpz)

 

Follow Us:
Download App:
  • android
  • ios