"ராஜா ராணி" சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். தொடர்ந்து சீரியல்களில் நடிப்பார் என்று பார்த்தால், அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவுடன் காதல் வானில் மிதக்க ஆரம்பித்தார். 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

இதையடுத்து கடந்த மே மாதம் பெற்றோர்களை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சின்னத்திரையில் பிரபலமான இந்த காதல் ஜோடிக்கு அடுத்த பரிசாக ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் ஆல்யா மானசாவிற்கு வளைகாப்பு நடத்தப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார் ஆல்யா மானசா. அண்மையில் நியூ இயரை முன்னிட்டு, இவர் தனது கணவர் சஞ்சீவ் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து  கோத்தரிக்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் மலை ஏற சென்றுள்ளனர். ஆனால் கர்ப்பிணியான ஆல்யா மலையேறாமல் ஜீப்பில் செல்ல முடிவு எடுத்துள்ளார். 

இதையும் படிங்க: காதலியாகி டூயட் பாடத்துடிக்கும் அனிகா சுரேந்திரன்... போட்டோ போட்டு சான்ஸ் தேடி தீவிர வேட்டை..!

ஆனால் ஆல்யா சென்ற ஜீப் பாதி வழியில் ரிப்பேர் ஆகி நின்றுள்ளது. நேரம் ஆக, ஆக பயங்கரமாக இருட்டியுள்ளது. ஜீப் ரிப்பேர் ஆகி நின்ற இடம் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாம். இதனால் ஆல்யா மானசா மற்றும் அவர்களுடன் சென்றவர்கள் பீதியடைந்துள்ளனர். 

இதுபற்றி அவர்களுடன் சென்ற இயக்குநர் பிரவீன் பென்னட், ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் திரவியம் ஆகியோர் தங்களது ஜீப்பில் வந்து, நடுவழியில் சிக்கியிருந்தவங்களை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.