இயக்குனர் ஹரி - நடிகை ப்ரீத்தா ஜோடியின் மகன் ஸ்ரீராம் ஹும் என்கிற படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளவர் ஹரி. அவர் இயக்கத்தில் தற்போது ரத்னம் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 26-ந் தேதி ரத்னம் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஹரி, நடிகை ப்ரீத்தாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான ஸ்ரீராம் தற்போது இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஹும் என்கிற பைலட் பிலிமை எடுத்து முடித்துள்ளார். அப்படம் தற்போது யூடியூப்பில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... சும்மா தாறு மாறா இருக்கே! ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் 'படே மியன் சோட்டே மியன்' டிரைலர்!

ஹும் படத்தின் மூலம் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார் ஸ்ரீராம். இப்படத்தில் ஸ்ரீராமின் சித்தியும், நடிகையுமான ஸ்ரீதேவி விஜயகுமாரும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். சஞ்சய் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் கார்மெலஸ் இசையமைத்து உள்ளார்.

ஹும் திரைப்படம் தற்போது யூடியூப்பில் வெளியாகி இருக்கிறது. தந்தையை போல் அதிரடி ஆக்‌ஷன் படமாக இதை எடுக்காமல் திரில்லர் ஜானரில் இப்படத்தை எடுத்திருக்கிறார் ஸ்ரீராம். தற்போது ஹும் திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவதோடு, ஸ்ரீராமின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

HUM - the film || Sriram Hari || Sanjai Raj || Sam Carmelous || Harshini Dass || Sridevi Vijaykumar

இதையும் படியுங்கள்... Aadujeevitham :ஆடுஜீவிதம் படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி தமிழ் படத்தில் நடித்துள்ளார்.. எந்த படம் தெரியுமா?