prabudeva turn to direct bollywood movie making

மீண்டும் ஹிந்தி படம் இயக்கப் போவதாக நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா தெரிவித்து உள்ளார்.

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா ஹன்சிகா நடித்துள்ள படம் குலேபகாவலி. இந்தப் படம் வருகிற பொங்கலன்று திரைக்கு வருகிறது. தேவி படத்திற்குப் பிறகு பிரபுதேவா இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதனால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகை ஹன்சிகாவிற்கும் பட வாய்ப்புகள் குறைந்ததால் இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். 



குலேபகாவலி படத்திற்குப் பிறகு ஹன்சிகா விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக துப்பாக்கி முனை என்ற படத்தில் நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது குலேபகாவலி படத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திக்கான புரமோஷன் வேலைகளில் பிசியாக உள்ளார் பிரபு தேவா.