கோலிவுட் திரையுலகில், டான்ஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் பிரபுதேவா தான். நடனத்தை தாண்டி முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். 

இவர் 1995 ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒருசில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

பிரபுதேவாவின் மூத்த மகன் விஷால், புற்று நோய் காரணமாக, கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மகனின் பிரிவு, இவரை மிகவும் பாதித்தது. இதில் இருந்து மீண்டு வர சில காலம் எடுத்து கொண்டு தன்னுடைய கவனத்தை திரைப்படம் இயக்குவதில் செலுத்தினார்.

பின் பிரபல நடிகையுடன் காதல் கிசுகிசு, கல்யாணம், காதல் பிரிவு என பல மன ரீதியாக பிரச்சனைகளை சந்தித்தார்.

ஆனால் தற்போது வரை தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக நேரம் செலவிட மட்டும் இவர் தவறியதே இல்லை. அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டுமே இதற்கு முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக தன்னுடைய இரண்டு மகன்களின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறிய பிள்ளைகளாக இருந்த பிரபுதேவாவின் மகன்களா இவ்வளவு பெரிதாக உள்ளது என பார்ப்பவர்களே ஆச்சர்யப்படும் அளவிற்க்கு வளர்த்துள்ளனர் உள்ளனர்.