பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர், அஜித் நடித்த வலிமை, பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய பிரம்மாண்ட படங்கள் வெளியாவதாக இருந்தன. அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, இந்தப் படங்களின் வெளியீடு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்குவதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அதன்படி வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி வெளியாக உள்ளது. அதேபோல் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வருகிற மார்ச் 25-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த இரண்டு படங்களுடன் பொங்கலுக்கு வெளியாக இருந்த பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு ஒரு நாள் முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாக உள்ளது.

இதன்மூலம் இந்த இரண்டு படங்களுக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் படமும், பிரபாஸின் படமும் முதன்முறையாக மோத உள்ளன. இதில் வெல்லப்போவது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமா அல்லது பிரபாஸின் ராதே ஷ்யாம் படமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.