அனுமன் ஜெயந்திக்காக ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் - பிரபாஸ் வேறலெவல்ல இருக்காரே..!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ராமபிரானின் தீவிர பக்தரான அனுமனின் பிரத்யேக போஸ்டரை 'ஆதி புருஷ்' படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீப் அலி கான், தேவதத்தா நாகே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனுமன் ஜெயந்தி தினமான இன்று ஆதி புருஷ் படத்தில் ஹனுமனாக நடித்துள்ள நடிகர் தேவதத்தா நாகேவின் தோற்றம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரின் பின்னணியில் பிரபாஸின் தோற்றமும் அடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக கருத்து சொன்ன பிக்பாஸ் அபிராமி... பதிலடி கொடுத்த சின்மயி
ஸ்ரீ ராமபிரான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருக்கும் ஸ்ரீ அனுமானின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் 'ஆதி புருஷ்' படத்தில் நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். ராமபிரானுக்கு துணையாகவும், பாதுகாவலராகவும், அனுமனின் பக்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த புனிதமான அனுமன் ஜெயந்தியின் நன்னாளில் அவர்களது பக்தர்களுக்காக பட குழுவினர் இந்த பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் புகழ் பெற்ற 'அனுமன் சாலிசா' எனும் பக்தி பாடலில் இடம்பெற்றிருக்கும் '' வித்யாவான் குனி- மிகவும் புத்திசாலி. ராமபிரானுடன் நெருங்கி பழக ஆவலுடன் இருக்கிறான்'' என்ற வரிகளை இந்த தெய்வீகம் ததும்பும் போஸ்டர் நினைவூட்டுகிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Nayanthara : போட்டோ எடுத்தா போனை உடைச்சிடுவேன்... ரசிகரிடம் கடிந்துகொண்ட நயன்தாரா