மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன் நடித்துள்ள ராஜா சாப் திரைப்படத்தின் இரண்டு அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உள்ளது.
Raja Saab Teaser Release Date : சலார், கல்கி என இரண்டு பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்ததால் நடிகர் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரபாஸின் அடுத்த படம் ராஜா சாப். மருதி இயக்கியுள்ள இந்தப் படத்தின் அப்டேட் எப்போ வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ராஜா சாப்புக்கான புதிய அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராஜா சாப் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?
இன்று வெளியான டீசர் அறிவிப்பு போஸ்டரில் பிரபாஸ் மாஸ் கெட்டப்பில் காட்சியளிக்கிறார். கருப்பு பனியன், சிவப்பு துணியுடன், நெருப்புக்கு நடுவே நிற்கும் அவரின் ஸ்டைலிஷ் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், அது அவரது டார்லிங் படத்தில் வந்த தோற்றத்தை நினைவு கூர்கின்றனர். ராஜாசாப் டீசர் வருகிற ஜூன் 16ந் தேதி காலை 10:52 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் வெளியீட்டு தேதியும் இந்த அப்டேட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜா சாப் படம் டிசம்பர் 5ந் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரிக்கிறார். மருதி இயக்கத்தில் உருவாகும் ராஜாசாப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதேபோல், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா பிரபாஸ்?
பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும். டீசர் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரபாஸின் திரைப்பயணத்தில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். ராஜா சாப் வெற்றி பெற்றால், பிரபாஸின் திரைப்பயணத்தில் இன்னொரு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
