நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடிப்பதற்காக 5 வருட தவமே இருந்தார். காரணம் இந்த படத்திற்காக அவர் எந்த ஒரு படத்தையும் ஒற்று கொள்ளவே இல்லை, மேலும் பல்வேறு கடினமான உடல் பயிற்சி, உணவு கட்டுப்பாடு எடை ஏற்றம், குறைப்பு என பல போராட்டங்களை தாண்டித்தான் பாகுபலி திரைப்படம் வெளிவந்தது.

இப்படி இந்த ஒரு படத்திற்காக தன்னையே மாற்றிக்கொண்டு பல்வேறு சந்தோஷங்களை இழந்த பிரபாஸ், படம் வெளியாகி 1000 கோடி வசூல் சாதனை செய்து விட்ட சந்தோஷத்தை அமெரிக்காவில் கொண்டாடி வருகிறாராம்.

தற்போது இந்த சந்தோஷத்தை பேச்சிலராக நண்பர்களுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் பிரபாஸ் விரைவிலேயே திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடைய தாயார் பல பெண்களை பார்த்து வைத்துள்ளதாகவும், அமெரிக்க ட்ரிப் முடித்து விட்டு வந்ததும் மெல்ல திருமண பேச்சை ஆரம்மித்து  இந்த வருடமே அவருடைய திருமணம் நடந்துவிடும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.