இந்தியில் 2016ம் ஆண்டு அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அஜித், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் தல ஃபேன்ஸுக்கு விருந்தாக மட்டுமின்றி, அவருடைய அடுத்த பரிமாணத்தையும் தெளிவாக காட்டியது. ’No Means No’ என்ற வாசகத்தை தாங்கி வந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

 

இதையும் படிங்க: இதை மட்டும் செய்தீர்கள் என்றால்? மறக்க முடியாத முதல்வர் என உங்களை உயர்த்தி பிடிப்போம்... பாரதிராஜா வேண்டுகோள்!

இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் பிங்க் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டார். அதன்படி தெலுங்கு ரீமேக்கில் உருவாகி வரும் பிங்க் திரைப்படத்திற்கு வக்கீல் சாப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப் பச்சன், அஜித் ஆகியோர் நடித்த வக்கீல் கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கிறார். அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். வேணு ஸ்ரீராம் இயக்கி வரும் “வக்கீல் சாப்” படத்தினை போனி கபூர் மற்றும் தில் ராஜு இணைந்து தயாரித்துள்ளனர். 

கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் மூடப்படாமல் இருந்தால் வக்கீல் சாப் திரைப்படம் கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. புதிய ரிலீஸ் தேதி என்ன என்பது இன்னும் படக்குழு உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில், பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: “கே.ஜி.எஃப்” ஹீரோ மகனுக்கு பெயர் வச்சாச்சு... ரொம்ப யோசிச்சு எப்படிப்பட்ட பெயரை தேர்வு செஞ்சிருக்கார் பாருங்க!

இளமையான வக்கீல் கெட்டப்பில் ஒரு கையில் பேஸ் பால் பேட்டும் மற்றொரு கையில் சட்ட புத்தகத்தையும் வைத்துக் கொண்டு மாஸாக போஸ் கொடுத்திருக்கும் பவன் கல்யாணை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அந்த மோஷன் போஸ்டர் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அஜித் ரசிகர்கள் தான் நாங்க எத்தனை முறை கேட்டாலும் ‘வலிமை ’அப்டேட் சொல்லமாட்டேங்கிறீங்களே போனி கபூர் ஜி என கடுப்பில் உள்ளனர்...