குஜராத்தை சேர்ந்த பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், நடிகருமான முனாவர் பாரூகி, இந்து கடவுள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும் சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக நேற்று நான்கு நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பேசிய ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் பாரூகி, இந்து கோவாவில் பற்றியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும் நம்பகத்தன்மையற்ற அவதூறு கருத்துகளை அங்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ மாலினி லக்ஷ்மன் சிங் கவுரின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் (36) புகார் அளித்ததன் அடிப்படையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். ஜாமீன் கூறி நடிகர் தரப்பில் இருந்து, மனு தாக்கல் செய்தபோதும்  அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

இந்து கடவுள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறியதாக காமெடி நடிகர் முனாவர் பாரூகி மற்றும் அவரது நான்கு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.