இந்த வாரம் நடந்த அரண்மனை டாஸ்கில், ராஜா - ராணியாக இருந்த, ராபர்ட் மற்றும் ரக்ஷிதா ஆகியோர் சரியாக பர்ஃபாம் செய்யாத காரணத்தால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு மிகவும் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த டாஸ்கில் முழு ஈடுபாடுடன் போட்டியாளர்கள் விளையாட வேண்டும். அப்படி விளையாடாத இருவரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்து, ஜெயிலுக்கு அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது.

அந்த வகையில், ராஜா ராணி டாஸ்கில்... தன்னை நெருங்கி நெருங்கி வந்த ராபர்ட் மாஸ்டரை, திட்டவும் முடியாமல், கோபத்தை வெளிப்படுத்தவும் முடியாமல் இருந்த ரக்ஷிதா, சரியாக கேமில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இன்று ராபர்ட் மாஸ்டர் மீது அவர் தன்னுடைய கோபத்தை காட்டியதும், அவர் அழுத காட்சிகளும் புரோமோவில் வெளியானதையும் பார்க்க முடிந்தது.

'ஜெயிலர்' மேக்கிங் வீடியோ.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

ராபர்ட் - ரக்ஷிதா இருவருமே, மிகவும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று பர்ஃபாம் செய்த போதிலும், அவர்கள் அதனை சிறப்பாக செய்யவில்லை என, சக போட்டியாளர்கள் பெரும்பாலானோர் இவர்கள் இருவரின் பெயர்களை மட்டுமே கூறுகிறார்கள். இதனை ஏற்று கொண்டு, இவர்கள் இருவரும் தற்போது ஜெயிலுக்கும் ஒன்றாக சென்ற காட்சிகள் அன்சீன் புரோமோ மூலம் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Nikki Galrani Pregnant: கர்ப்பமாக இருக்கிறேனா..? உண்மையை போட்டுடைத்த நிக்கி கல்ராணி..!

ஏற்கனவே ரஷிதா மீது, ராபர்ட் மாஸ்டர் கோபமாக இருந்த நிலையில்... இருவரும் ஒன்றாகவே ஜெயிலுக்கும் சென்றுள்ளதால்... இவர்கள் கோபம் தணிந்து பேசிக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ... 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 81 ஆவது படம்! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

Scroll to load tweet…