'ஜெயிலர்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மேக்கிங் விடியோவை படக்குழு தற்போது வெளியிட, அது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து தற்போது, 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்', போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது படம் குறித்த சில முக்கிய தகவல்களை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தலைவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க உள்ள, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளதாக, அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. நடிகர் சிவராஜ்குமார் மறைந்த கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

இதைத்தொடர்ந்து இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், ஷூட்டிங் ஸ்பாட் மேக்கிங் வீடியோவை வெளியிட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது ரஜினிகாந்த் இந்த படத்தில் செம்ம மாஸாக நடித்து வருவது இந்த வீடியோ மூலம் தெரிகிறது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. 

விறுவிறுப்பாகவும்... பரபரப்பாகவும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தில் ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகர், பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, போன்ற பலர் நடிக்கின்றனர். மேலும் பிரபல நடிகை தமன்னா, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.