'காதல் ரோஜாவே' படத்தின் மூலம்  கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். இந்த படத்தை தொடர்ந்து, மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்தார். மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் இவரால், தமிழ் மொழி படங்களில் கவனம் செலுத்தமுடியவில்லை.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பின், உலகநாயகன் கமலஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்திருந்த 'விஸ்வரூபம்' படத்தில் நடித்தார்.

பின், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ,மண் பானையும் மீன் குழம்பும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் கமலஹாசனின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர், தற்போது இந்தியில் 'Invisible Mask ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, தன்னுடைய சகோதரரின் பிறந்து 14 நாட்களே ஆகும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பூஜா குமார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... 'என்னுடைய இந்த புதிய மருமகன் பிறந்து இது 14 வது நாள் !! உலகுக்கு வந்திருக்கும் என் அன்பான ஆரவ். அன்பும் சிரிப்பும் நிறைந்த உன்னை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் !! அன்பான பெற்றோர்களையும், உன்னை நேசிக்கும் பெரிய குடும்பத்தையும் பெற்றதற்கு நீ மிகவும் அதிர்ஷ்டசாலி என பதிவிட்டுள்ளார்.