கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு சமீபத்தில் கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதில் மேலும் விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர் உள்ளிட்டோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் பிரபல நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது. எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத், கலை தோட்டா தரணி, ஒளிப்பதிவு ரவி வர்மன், வசனம் ஜெயமோகன், இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் என டெக்னிக்கல் சைடும் செம்ம மாஸான டீம் களம் இறங்கியது. ஆனால் இந்த கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது. உலகம் முழுவதும் தீயாய் பரவிய கொரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்காக ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு அடித்து பிடித்து தாயகம் வந்து சேர்ந்தது. 

 

இதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...!.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட் லைகா தயாரித்து வரும் இந்த படத்தில் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது கூட இதுவரை வெளிவராத தகவலாக உள்ளது. அதனால் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை வரும் செப்டம்பர் மாதம் புனேவில் தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். குறைந்த அளவிலான நபர்களை வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை தொடங்க முடியுமா? என ஆலோசனை நடைபெற்று வருகிறதாம். அதுமட்டுமின்றி இந்த ஷூட்டிங்கில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.