பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் 1200 ரூபாயா?.. இதென்ன பகல் கொள்ளையா இருக்கே - எந்த ஊரில் தெரியுமா?
Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு டிக்கெட் ரூ.1200 வசூலிக்கட்டுள்ளதாக நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டு வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பட்டி தொட்டியெங்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் படம் ரிலீசாகும் முன்னர் திரையரங்குகளுக்கு இயக்குனர் மணிரத்னம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்பட்டது. அது என்னவென்றால், இப்படம் அனைத்து தரப்பினருக்குமான படம் என்பதால் இதைக் காண சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வருவார்கள். ஆதலால் படத்தின் டிக்கெட் கட்டணத்தை அதிகம் வசூலிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டாராம். இதனை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ‘நானே வருவேன்’னு அடம்பிடித்த தனுஷுக்கு ஆப்பு வச்ச பொன்னியின் செல்வன்! தனுஷ் படத்தின் 2ம் நாள் வசூல் இவ்ளோ தான்
ஆனால் வெளிமாநிலங்களில் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. பெங்களூருவில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு டிக்கெட் ரூ.1200 வசூலிக்கட்டுள்ளதாக நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டு வருகின்றனர். இதனை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு மூதாட்டி ஒருவர் தனது மகனிடம் தனக்கு பொன்னியின் செல்வன் டிக்கெட் வேண்டும் என்று கூறுகிறார். பதிலுக்கு அவரது மகன் டிக்கெட் 1200 ரூபாய் என கூற, உடனே தனது கழுத்தில் இருக்கும் நகையை கழட்டி கொடுத்து இதனை அடகு வைத்து டிக்கெட் வாங்கி வருமாறு கூறுகிறார். பின்னர் அது கவரிங் நகை என சொல்லும் நகைச்சுவையான வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஆடம்பரமான விருந்து... ஏனோ ரசிக்க முடியவில்லை - பொன்னியின் செல்வனை மறைமுகமாக விமர்சித்த பிரபல நடிகை