'பொன்னியின் செல்வன் 2' கடைசி நாள் ஷூட்டிங்கில்... வீடியோ போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி - சோபிதா துளிபாலா!
பொன்னியின் செல்வன் படத்தின், கடைசி நாள் ஷூட்டிங்கின் போது, இந்த படத்தில் நடித்துள்ள நடிகைகளான ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா ஆகியோர் எடுத்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னத்தின் 30 வருட, கனவாக இருந்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. மிகவும் சவாலான இந்த கதையை, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், 500 கோடி பட்ஜெட்டில் இயக்கி முடித்தார். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தை இயக்குனர் மணிரத்னம் நேர்த்தியாக இயக்கி உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்த படத்தில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், வநதிய தேவனாக கார்த்தி, அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா தூளிபாலா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான், ஜெயசித்ரா போன்ற பலர் நடித்திருந்தனர்.
நம் தென்னகத்தை ஆண்ட, மன்னன் ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால்.. இந்து பல்வேறு உண்மையை சம்பவங்களை புனையப்பட்ட கதையாக எழுதிய நூலை, இக்கால இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக, படமாக எடுத்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. மேலும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், சுமார் 3200 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான பொன்னியின் செல்வன் 2ம் பாகம் முதல் நாளிலேயே இந்திய அளவில் 30 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது.
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் அதிர்ச்சி மரணம்..! என்ன ஆச்சு?
அதே போல் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதாலும், முன்பதிவு டிக்கெட் மிகவும் வேகமாக பதியப்பட்டு வருகிறது. இந்த தகவல் 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் கடைசி நாளில், இந்த படத்தில் நடித்த நடிகைகளான... ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் மிகவும் சநதோஷமாக வீடியோ போஸ் கொடுத்தபோது எடுத்து கொண்ட, வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் இருவருமே... சமரசம் இல்லாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை குதூகலம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.