இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி கொடுத்து உதவும் படி மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

இதை ஏற்ற பல்வேறு தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் கோடிகளை வாரி வழங்கியுள்ளனர். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் கூட தளபதி விஜய் எந்த நிதியையும் அறிவிக்காமல் உள்ளாரோ என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று ஒரே நாளில் விஜய் ரூ.1.30 கோடியை நிவாரண நிதியாக அறிவித்தார். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், ஃபெப்சிக்கு ரூ.25 லட்சமும் அறிவித்தார். அதுமட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ரூ. 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 5 லட்சமும் வழங்கியுள்ளார். 

இதையும் படிங்க:  ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

விஜய்யின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். கொரோனா நோயை ஒழிக்க புதுச்சேரி அரசு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டேன். பல அமைப்பைச் சேர்ந்தவர்களும், மக்களும் தாமாக முன்வந்து நிதி உதவி அளித்துள்ளனர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!

புதுச்சேரி மாநிலத்திற்கு பல நடிகர்கள், நடிகைகள் வந்து ஷூட்டிங் எடுக்கிறார்கள். புதுச்சேரியில் படம் எடுப்பதற்கு ஏதுவான சூழ்நிலை நிலவுவதால் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அவர்களுக்கும் எங்களது புதுச்சேரி மாநிலத்திற்கு உதவ வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. அதை உணர்ந்து நடிகர் விஜய் அவர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்ம புதுச்சேரி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற அவருடைய தாராளமான மனதை நான் பாராட்டுகிறேன். அதேபோல் மற்ற நடிகர்களும் கொரோனா நிவாரண நிதிக்கு தாராளமாக உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நெருக்கடி நேரத்தில் அரசுக்கு துணை நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.