தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதுமே கடந்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுது போக்கு தளங்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக 204 நாட்களாக மூடப்பட்டிருக்கும் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு 5ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது அனுமதி அளித்தது. ஆனால் தமிழகத்தில் இதுவரை தியேட்டர்கள் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. 

 

இதையும் படிங்க: பேண்ட் போட்டிருக்காங்களா?... உடலோடு ஓட்டி உறவாடும் ஓவர் கிளாமர் உடையில் எமி ஜாக்சனின் கவர்ச்சி அதிரடி...!

இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நாளை முதல் தியேட்டர்கள் திறப்பட உள்ளன. இதற்காக நேற்று முதலே புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தியேட்டர்களை திறக்க அனுமதித்தாலும் கொரோனா நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

இதையும் படிங்க: இது உடலா? உடையா?... உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்....!

50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். திரைப்படம் தொடங்கும் முன்பும், இடைவேளையிலும் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும். தியேட்டருக்குள் நொறுக்குத் தீனி வழங்க கூடாது. கேன்டீன்களிலும் பாக்கெட் உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களை கட்டாயம் சேகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு புதுவையில் தியேட்டர்கள் திறக்கப்படுவதால் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.