Mansoor Ali Khan Issue: மன்சூர் அலிகான் விவகாரத்தில்! திரிஷாவுக்கு வந்த புது சிக்கல்.. இதை எதிர்பார்களையே பாஸ்

நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து அவதூறாக பேசிய புகார் தொடர்பாக த்ரிஷாவிடம் போலீசார் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Police letter to Trisha seeking explanation on Mansoor Ali Khan issue mma

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 'லியோ' படத்தில் நடிகை த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை, அவருடன் ரேப் சீன் எல்லாம் இருக்கும் என எதிர்பார்த்ததாக பேசிய, வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திரிஷா... மன்சூர் அலிகானுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டார். மேலும் 'லியோ' படத்தில் மன்சூர் அலிகானுடன் இணைந்து நடிக்காததை மிகவும் சந்தோஷமாக நினைப்பதாகவும், இனி எந்த படத்திலும் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என தெரிவித்தார்.

Police letter to Trisha seeking explanation on Mansoor Ali Khan issue mma

பல தமிழ் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி.. கொச்சியில் நேற்று காலமானார் - சோகத்தில் திரையுலகம்!

இதையடுத்து  மன்சூர் அலிகானுக்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர வேண்டும் என அழுத்தம் கொடுத்ததன் பேரில், சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது மட்டுமின்றி, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

Police letter to Trisha seeking explanation on Mansoor Ali Khan issue mma

இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் கொடுத்த மன்சூர் அலிகான், மன்னித்து விடு என அறிக்கை வெளியிட்டு இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்பட்ட நிலையில், பின்னர் தவறுதலாக அந்த வார்த்தை இடம்பெற்று விட்டதாகவும், மரணித்துவிடு என்று நான் கூறியதை PRO அப்படி அச்சிட்டு விட்டார் என்று மீண்டும் புதிய பிரச்சனையை கிளப்பினார்.

Anikha: குழந்தை நட்சத்திரமாக நடித்து கோடீஸ்வரியாக மாறிய குட்டி நயன் அனிகா! சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Police letter to Trisha seeking explanation on Mansoor Ali Khan issue mma

 அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பில் உண்மையாக நான் என்ன பேசினேன் என்பதை தெரிந்து கொள்ளாமல், யாரோ தன்னை தவறாக சித்தரிக்கும் விதத்தில் இது போன்ற வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளதை அறியாமல், தன் மீது வீண்பழி சுமத்திய த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி, போன்றோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நடிகை திரிஷாவிடம் விளக்கம் கேட்டு, ஆயிரம் விளக்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த்ரிஷாவிடம் இப்படி ஒரு விளக்கம் கேட்கப்படும் என்பதை பாவம் அவரு கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் பாஸ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios