ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி, இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். 

இதனிடையே சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். சீமானுக்கு விஜயலட்சுமி கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது நாம் அறிந்தது தான்.

இதனிடையே,  சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் மிரட்ட ல் விடுத்திருந்தார்.   கடைசியாக சீமானுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். 

விஜயலட்சுமியின் வீடியோவிற்கு பதிலடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் பலரும் அவரை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். தன்னை தரைகுறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியர் விஜயலட்சுமி.

இந்நிலையில் இவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக, விஜயலக்‌ஷ்மி ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்ததாகவும், இதற்கான வாடகை பணம் சுமார் 3 லட்சத்தை அவர் தரவில்லை என அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் வாய் மொழியாக புகார்  கொடுத்துள்ளாராம். இதை தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி அந்த விடுதிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக கூறியதை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.