பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை இவருடைய நினைவில் இருந்து, இவருடைய ரசிகர்கள் வெளியே வரவில்லை.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை இவருடைய நினைவில் இருந்து, இவருடைய ரசிகர்கள் வெளியே வரவில்லை.
மேலும் செய்திகள்: 25 வருடத்திற்கு முன்... குலுமணாலியில், விஜய்யுடன் நடித்த போது நடந்த சம்பவத்தை முதல் முறையாக கூறிய நடிகை வனிதா!
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பிலிருந்து இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமும் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சுஷாந்த் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது பணியாளர்களை அழைத்து, இதற்கு மேல் என்னால் சம்பளம் கொடுக்க முடியாது, அந்த சூழலில் நான் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் சுஷாந்த் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகள்: இவர் தான் புது காதலர்... திருமணம் செஞ்சுக்கபோறேன்! கணவருக்கு ஷாக் கொடுத்த நடிகை ஆர்த்தி! இப்படி ஒரு ட்விஸ்ட்?
இந்நிலையில் சுஷாந்துடன் இணைத்து காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 9 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இருவரும் ஒன்றாக வாழ்ந்ததை ரியா ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இடையில் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரது மொபைலில் இருவரும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இருவரும் அடிக்கடி சாட் செய்தும் வந்துள்ளனர். சண்டை போட்டு பிரிந்தாலும் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் சுஷாந்த், ரியாவிடம் பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகள்: காதல் மனைவி சங்கீதாவுடன் தளபதி விஜய்...! அசரவைக்கும் அழகு தம்பதியின் அரிய புகைப்படங்கள்..!
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் ரசிகர் ஒருவர், நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் நடிகை ரியா சுஷாந்த்தை பொருளாதார ரீதியாக பயன்படுத்தி கொண்டு, மன ரீதியாக காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங்கின் ரசிகர் தொடுத்துள்ள இந்த வழக்கின் அடிப்படையில் , ரியா சக்ரபோர்த்தி மீது ஐபிசி 306 மற்றும் 420 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
