Police again uniform Who in the picture?
விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்.
அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டியும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை அடுத்து அஜித் அடுத்து எந்த படத்தில் நடிப்பார்? என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இயக்குநர் சிவாவுடன் அஜித் கூட்டணி சேரப் போவதாக ஒரு தகவல் வெளியானது. அந்தப் படம் வரலாறு சம்மந்தப்பட்ட கதை என்றும் கூறப்பட்டது.
அந்த வகையில், அடுத்ததாக இவர்கள் கூட்டணியில், அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இயக்குனர் சிவா இயக்கிய முதல் படம் ‘சிறுத்தை’. இதில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அஜித்தை வைத்து போலீஸ் படம் இயக்க இருக்கிறாராம் சிவா.
போலீஸ் காம்பினேஷன் அஜித்துக்கும், சிவாவுக்கும் நல்லாவே வேலை செய்யும். வெற்றிப் படமாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கு.
