பிக்பாஸ் புகழ் வனிதாவின் 3வது கல்யாணத்திற்கான எதிர்ப்பு மற்றும் ஆதரவு பற்றி சோசியல் மீடியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது. 40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதும், பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை கரம் பிடித்ததும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீட்டர் பால் சமாச்சாரம் வெளியே வராத வரை வனிதாவின் திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்ததாக பீட்டர் பால் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு வனிதா மீதான எதிர்ப்பு அலைகளை அதிகரிக்க வைத்துள்ளது. 

 

இதையும் படிங்க: கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

இதையடுத்து வனிதாவை சூர்யா தேவி என்ற பெண் தரக்குறைவாக விமர்சித்து யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்தார். அதேபோல் தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதா - பீட்டர் பால் கல்யாணம் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார். இதனால் பொறுத்து, பொறுத்து பார்த்த வனிதா பொங்கியெழுந்தார். தனது வழக்கறிஞருடன் சென்று, இருவர் மீதும் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அத்தோடு நிற்காமல் செய்தியாளர்களை சந்தித்த வனிதா மற்றும் அவருடைய வழக்கறிஞர், சூர்யா தேவி சென்னையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்று வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டனர். 

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

அதுமட்டுனின்றி பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நாஞ்சில் விஜயன் என்பவருக்கும் சூர்யா தேவிக்கும் தொடர்பு இருப்பதாகவும், இருவரும் கொஞ்சிக்கொள்ளும் வீடியோ ஒன்றையும் வழக்கறிஞர் ஸ்ரீதர் வெளியிட்டார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியை தனது யூ-டியூப் சேனலுக்காக பேட்டி எடுக்க மட்டுமே சந்தித்ததாகவும், தன்னைப் பற்றி தேவையில்லாமல் அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

அப்படி பேசிக்கொண்டிருந்த நாஞ்சில் விஜயன், “வனிதா அக்கா எனக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை. உங்கள பற்றி நான் ஒரு வார்த்தை கூட தப்பா பேசுனது இல்ல. உங்க தராதரம் வேற, நான் எல்லாம் உங்களுக்கு சமமே இல்ல. என்னை தயவு செஞ்சி விட்டுடுங்க வனிதா அக்கா” என கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்துவிட்டார். வயிற்று பிழைப்பிற்காக யூ-டியூப் சேனல் ஆரம்பித்ததாகவும், நான் ஒரு சாதாரண மனிதன் என்னை விட்டுடுங்க என்றும் கெஞ்சினார். மேலும் வனிதாவின் பேட்டியை பார்த்ததில் இருந்தே தனக்கு தூக்கம் வரவில்லை என்றும், யார் என்றே தெரியாத பெண் ஒருத்தி தனக்கு போன் செய்து பச்சை பச்சையாக திட்டுவதாகவும் வேதனையுடன் கதறியுள்ளார்.