3Years Of BB petta : ரஜினியின் பேட்டை வெளியாகி 3 வருடங்கள் கடந்துள்ளதை கொண்டாடும் விதமாக பேட்டையிலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினியின் 165 வது படமான பேட்டையில் டார்ஜிலிங்கில் ஒரு ஹாஸ்டலில் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க இரும்புக்கதவை திறந்து எண்ட்ரி ஆகும் ரஜினி, அதன் பின் தனது ஸ்டைலில் சண்டை, பின்னர் மாஸ் மரணம் சாங், அதில் எஸ்.பி.பியின் கந்தர்வக்குரல் என ரசிகர்களை கொண்டாட வைத்தது ரஜினியின் என்ட்ரி என பட்டையை கிளப்பி இருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, நவாஸுத்தீன் சித்திக்கி, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் ரிலீஸாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தை பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. படம் முழுக்க தலைவரை இந்த அளவுக்கு ஸ்டைலாக காட்டியிருக்கிறாரே என கார்த்திக் சுப்புராஜை வாழ்த்தினார்கள்.

இதுகுறித்து பேட்ட படத்தின் இதுவரை வெளிவராத போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு கார்த்திக் சுப்புராஜ்; என் வாழ்க்கையின் மிகவும் மேஜிக்கலான நாள் வந்து இன்றுடன் 3 ஆண்டுகள். லவ் யூ தலைவா...இந்த நாளுக்கு இந்த போஸ்டர் மட்டும் போதாது. ஸ்பெஷல் டிலீட்டட் காட்சி ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றார். அதன்படி தற்போது டெலீட்டட் சீன் வெளியாகியுள்ளது. அதில் முதல் முறையாக ரஜினியும், விஜய்சேதுபதியும் சந்திக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

YouTube video player