நடிகை வனிதா பல கனவுகளோடு கரம் பிடித்த 3 ஆவது கணவர் பீட்டர் பால் பற்றி, அவருடைய மகன், வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த் திருமண புகைப்படங்கள் இதோ..!
 

பழம்பெரும் நட்சத்திர ஜோடிகளான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகளான, வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார். குடும்பத்தினர் மத்தியிலும், அவப்பெயர் எடுத்து யாருடனும் பேசாமல் தன்னுடைய இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய உணர்ச்சியையும், பெண்மையையும் அறிந்த  திரையுலகை சேர்ந்த  பீட்டர் பால் என்பவரை , தன்னுடைய அம்மா - அப்பாவின் திருமண நாள் அன்றே கரம் பிடிக்க போவதாக கூறினார். இவர் அறிவித்தது போலவே இவர்களுடைய திருமணம் கடந்த வாரம், வீட்டிலேயே மிகவும் எளிமையாக கிருஸ்தவ முறையில் நடந்து முடிந்தது.

மேலும் செய்திகள்: காமெடி கிங் கவுண்டமணியின் அழகிய பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா...? வாங்க பார்க்கலாம்..!
 

திருமணமான மறு  தினமே... பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். இதில் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறுவதற்கு முன்பே, பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக முன்னாள் மனைவி தெரிவித்திருந்தார். மேலும் தொடர்ந்து இது குறித்து பல பேட்டிகளும்  கொடுத்து வந்தார்.

இந்நிலையில் இவரை தொடர்ந்து, பீட்டர் பாலின் மகன் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: கொசுவலை போல் இருக்கும் சேலையில்... இடுப்பழகை எடுப்பாய் காட்டி போஸ் கொடுக்கும் நடிகை தர்ஷா குப்தா..!
 

இதில், தன்னுடைய தந்தைக்கு பல பெண்களுடன் தவறான உறவில் உள்ளதாகவும், மேலும் அடிக்கடி வீட்டிற்கு குடித்து விட்டு வருவார் என்றும் கூறியுள்ளார். எப்போதுமே அவர் உண்மையாக நடந்து கொண்டது இல்லை எனவே தனக்கு அவரை பிடிக்காது என்றும் மனம் வெறுத்து பேசியுள்ளார்.

ஒருமுறை வனிதாவின் வீட்டுக்கு தந்தை தன்னை டின்னருக்கு அழைத்து சென்றதாகவும், தெரிவித்துள்ள பீட்டர் பால் மகன், திருமண பத்திரிக்கை பற்றி கேட்டதற்கு யாரோ வனிதாவின் பெயரை கெடுக்க வேண்டும் என பரப்பி விட்டதாக கூறியுள்ளார். 

மேலும் தன்னுடைய அம்மா எலிசபெத் 1 கோடி கேட்டு மிரட்டுவதாக வனிதா கூறுவது முற்றிலும் பொய் என்றும், அவர் தான் தன்னுடைய அம்மாவின் அணைத்து நகைகளையும் அடகு வைத்து விட்டார் அதனால் பாட்டி தந்தையிடம் 5 லட்சம் கேட்டார் என பீட்டரின் மகன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: அழகிய இன்டீரியர் ஒர்க்... பிரமாண்டமாய் இருக்கும் நடிகை சுஹாசினி மணிரத்னம் வீடு! வாங்க பார்க்கலாம்...
 

குறிப்பாக தன்னுடைய தந்தை டீடோட்லர் கிடையாது என, வனிதா கூறியதற்கு பதிலடி கொடுப்பது போல் உள்ளது பீட்டர் மகன் பேச்சு.